Lessons of Jesus
Chapter 1: Couldn’t even find time to eat
Chapter 1: Couldn’t even find time to eat
Previous Chapter: Introduction
அதன் பின்பு கர்த்தர், தன் சீஷர்களை தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்கு அழைத்து சென்றார், அது ஏறக்குறைய 2 அல்லது 3 நாள் பயணமாக கூட இருந்திருக்கலாம், அங்கே ஒரு கானானிய ஸ்திரீ, சீஷர்களே எரிச்சல் அடைகிற அளவுக்கு கர்த்தரை தொடர்ந்துக் கூப்பிட்டு கொண்டே இருந்தாள் என்று மத்தேயுவின் சுவிஷேச புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது - 21.பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். 22.அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். 23.அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள் - மத்தேயு 15:21-23
அப்பொழுது பதிலளிக்காத கர்த்தர் "நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே" என்று அவள் சொன்னவுடன், "நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார் - 26.அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள். 27.இயேசு அவளை நோக்கி: முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். 28.அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். 29.அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார். 30.அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள். 31.மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார் - மாற்கு 7:24-31
இப்படி சொல்லி, தேவனுடைய குமாரனாகிய அவர் சிந்தும் இரத்தமே [பிள்ளைகள் சிந்துகிற துணிக்கை] நம்மை விடுதலையாக்கும் என்று விளக்கி காட்டினார்.
Next Chapter: Mother of Jesus in the Book of John