Ezekiel's Explanation
Jesus Christ is the Son of the Father, Son of the Word, and Son of the Holy Spirit
Jesus Christ is the Son of the Father, Son of the Word, and Son of the Holy Spirit
Previous Chapter: Elijah's Explanation
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் முதல் அதிகாரத்தில் சொல்லப்பட்ட தரிசனங்கள் பரலோக தேவனின் திருத்துவதை விளக்குவதாக இருக்கிறது,அதனால் தான் புசல்காற்றும், பெரிய மேகமும், மற்றும் அக்கினி என மூன்று காரியங்களுடன் ஆரம்பிக்கிறது - இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது - எசேக்கியேல் 1:4
அதே சமயத்தில் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை குறித்துச் சொல்லும் பொழுது, கர்த்தரை தீர்க்கதரிசி என்றும், அவர் சங்கரிக்கப்பட வேண்டும் என்றும், அவருடைய தண்டனை நம்மெல்லாருடைய தண்டனைக்கு ஒப்பாய் இருக்கும் என்றும், அதினிமித்தமாகவே நாம் தேவனையுடைய ஜனமாய் இருப்போம் என்றும் தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார் - 9.ஒரு தீர்க்கதரிசி எத்தப்பட்டு ஒரு விசேஷத்தைச் சொன்னானாகில், அப்படிக்கொத்த தீர்க்கதரிசியைக் கர்த்தராகிய நானே எத்தப்படப்பண்ணினேன்; நான் அவனுக்கு விரோதமாக என் கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அழிப்பேன். 10.அப்படியே அவரவர் தங்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும். 11.இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார் - எசேக்கியேல் 14:9-11
இப்படி இயேசு கிறிஸ்துவை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த எசேக்கியேல் தீர்க்கதரிசி, கர்த்தரின் திருத்துவதை விளக்குவதற்காக, வேதாகமத்தின் நோவா, தானியேல், யோபு என்கிற மூன்று பாத்திரங்களை எடுத்துக் கொண்டு, தேவகோபாக்கினை வரும் பொழுது நோவா, தானியேல், யோபு போன்றோர்களால் கூட தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற முடியாது என்றும் - 12.கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 13.மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணிக் கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன். 14.அப்பொழுது நோவா, தானியேல், யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 15.நான் தேசத்தில் துஷ்டமிருகங்களை அனுப்ப, அம்மிருகங்களினிமித்தம் ஒருவரும் அதின் வழியாய் நடக்கக்கூடாதபடி வெறுமையும் பாழுமாகும்போது, 16.அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 17.அல்லது நான் அந்த தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணி: பட்டயமே, தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்போது, 18.அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 19.அல்லது நான் அந்த தேசத்தில் கொள்ளைநோயை அனுப்பி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என் உக்கிரத்தை ஊற்றும்போது, 20.நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரனையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் - எசேக்கியேல் 14:12-20
இப்படி தேவகோபாக்கினையின் நாட்களில், வேதாகமத்தில் நீதிமான்களாய் காணப்பட்ட நோவா, தானியேல், யோபு என்னும் மூன்று புருஷரால் தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற முடியாது, ஆனால் இயேசு கிறிஸ்துவால் (அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்கிற திரியேக தேவனின் மூன்று குமாரர்களால்) தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற முடியும் என்கிற ஆறுதலின் செய்தியை தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார் - 21.ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்? 22.ஆகிலும், இதோ, அதிலே தப்பி மீதியாகி வெளியே கொண்டுவரப்படுகிற குமாரரும் குமாரத்திகளும் சிலர் இருப்பார்கள்; இதோ, அவர்கள் உங்களண்டைக்குப் புறப்பட்டு வருவார்கள்; அப்பொழுது நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியைகளையும் கண்டு, நான் எருசலேமின்மேல் வரப்பண்ணின தீங்கையும் அதின்மேல் நான் வரப்பண்ணின எல்லாவற்றையுங்குறித்துத் தேற்றப்படுவீர்கள். 23.நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியையையும் காணும்போது, அவர்கள் உங்களுக்குத் தேற்றரவாயிருப்பார்கள்; நான் அதிலே செய்த எல்லாவற்றையும் முகாந்தரமில்லாமல் செய்யவில்லையென்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொன்னார் - எசேக்கியேல் 14:21-23
Next Chapter: Law or the Prophets