Lessons of Jesus
Chapter 1: Couldn’t even find time to eat
Chapter 1: Couldn’t even find time to eat
Previous Chapter: Introduction
அதனை தொடர்ந்து, கர்த்தர் தன் சீஷர்களுக்கு தான் உவமைகள் மூலமாக மாத்திரமே பேசுகிறவர் என்பதையும் கற்றுக் கொடுத்தார், அதற்கான விளக்கத்தை கேட்கும் பொழுது, அவரே அதின் விளக்கத்தையும் சொல்லிக் கொடுப்பார் என்பதையும் அனுபவ பாடமாக கற்றுக் கொடுத்தார் - 10.அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக்குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11.அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. 12.அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். 13.பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்? - மாற்கு 4:10-13
இன்றைக்கும் கர்த்தர் தரிசனங்களின் மூலமாக நம்மோடு பேசும் பொழுதும் அதில் உவமைகள் இருக்கும், நாம் கர்த்தரின் பாதத்தில் அமர்ந்து, தரிசனத்தை நிதானித்து அறிந்துக் கொள்வது அவசியம் - 30.பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? 31.அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது; 32.விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார். 33.அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். 34.உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார் - மாற்கு 4:30-34
தான் உவமைகள் மூலமாக பேசுகிறவர் என்பதை சொல்லிக் கொடுத்த கர்த்தர், தன் சீஷர்களிடம் "அக்கரைக்குப் போவோம் வாருங்கள்" என்று அழைத்தது, இந்த உலக காரியங்களையெல்லாம் விட்டு விட்டு தன்னோடிருக்கும் பரலோக ராஜ்யத்திற்கான அழைப்பாக தான் இருந்தது, ஆனால் இயேசு கிறிஸ்துவை சாதாரண மனிதனாக பார்த்த சீஷர்களுக்கு, கர்த்தரின் அழைப்பு எவ்வளவு விலையேறப்பெற்றது என்பது தெரியாது, அது தெரியாமலேயே அவர்களும் கர்த்தரோடு படவில் சென்றார்கள் - 35.அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். 36.அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது. 37.அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. 38.கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள். 39.அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. 40.அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். 41.அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் - மாற்கு 4:35-41
சகலத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனை, சாதாரண மனிதனாக பார்த்ததினால் தான், கர்த்தர் செய்த அற்புதத்தை பார்த்த பொழுதும், சீஷர்கள் இன்னும் உணர்வடையாமல் "இவர் யாரோ?" என்று கேட்டார்கள்.
Next Chapter: Mother of Jesus in the Book of John