Woe to you, Chorazin!
Translation in progress from www.parisurthar.com
Woe to you, Chorazin!
Translation in progress from www.parisurthar.com
"கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ" என்று யாரைக் குறித்து இயேசு கிறிஸ்துச் சொன்னார்? இதன் அர்த்தத்தை அறிந்துக்கொண்டால் தான், கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களின் முடிவு எவ்வளவு பரிதாபமானது என்பதையும், அப்படிப்பட்டவர்களின் இரட்சிப்புக்காக தேவனிடம் மன்றாடுவது எவ்வளவு அவசியமானது என்பதையும் அறிந்துக்கொள்ள முடியும்.
தேவனாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் இருக்கும் பொழுது, மனிதனால் கிரகிக்க முடியாத பல அற்புதங்களை செய்தார், ஆனால் ஞானிகளும் கல்விமான்களுமாய் இருந்தவர்களோ தங்கள் மத நம்பிக்கையை விட்டு இயேசு கிறிஸ்துவை இரட்சகர் என்று ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள், அப்படிபட்ட சூழ்நிலையில் இயேசு கிறிஸ்து சொன்னது தான் "கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ" என்பது ஆகும் - 20.அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில் அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள், மனந்திரும்பாமற் போனபடியினால், அவைகளை அவர் கடிந்து கொள்ளத்தொடங்கினார். 21.கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். 22.நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 23.வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும். 24.நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 25.அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 26.ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது - மத்தேயு 11:20-26
இதை நாம் இலேசாக எடுத்துக்கொள்ள கூடாது, ஏனென்றல் இப்படி கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களின் முடிவு கந்தகத்தாலும் அக்கினியினாலும் அழிக்கப்பட்ட சோதோமை காட்டிலும் மோசமானதாக இருக்குமாம் - 24.அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, 25.அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார் - ஆதியாகமம் 19:24-25
இப்படி இயேசுவை தேவன் என்று ஏற்றுக் கொள்ளாத கோராசின் மற்றும் பெத்சாயிதா பட்டணத்தோடு, இயேசு கிறிஸ்து வாழ்ந்த கப்பர்நகூமும் சேர்ந்துக் கொண்டது - 13.கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள். 14.நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும். 15.வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, 16.சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார் - லூக்கா 10:13-17
ஏனென்றால் அவர்கள் இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களையும், அடையாளங்களையும் கண்டும், அவரை தேவன் என்று ஏற்றுக் கொள்ளாமல், ஒரு தீர்க்கதரிசி என்றோ, அல்லது ஒரு விசேஷித்த நபர் என்றோ சொன்னவர்கள், இப்படி பட்டவர்களின் முடிவை குறித்து தான் உனக்கு ஐயோ என்று இயேசு கிறிஸ்துச் சொன்னார், அது கந்தகத்தாலும் அக்கினினாலும் அளிக்கப்பட்ட சோதோமின் முடிவை காட்டிலும் மோசமாக இருக்கும் - 18.பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 19.அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 20.அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான். 21.அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார் - லூக்கா 9:18-21