இயேசு கிறிஸ்து தனது சிலுவையருகே நின்ற, பரலோகத்தின் தேவனை[இயேசுவின் உண்மையான தாயை] "ஸ்திரீயே" என்று அழைக்க காரணம் என்ன? மேலும் பரலோகத்தின் தேவனிடம், தமக்கு அன்பாயிருந்த சீஷனை "அதோ, உன் மகன்" என்று சொல்லி ஒப்படைக்க காரணம் என்ன? 26.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான் - யோவான் 19:26-27
இயேசு கிறிஸ்து, தான் சிலுவைக்குப் போகும் முன்பு, தன்னுடைய மரணத்தினிமித்தம் பிதா அடைய போகும் வேதனையை, பிரசவத்தினிமித்தம் வேதனைப்படுகிற ஸ்திரீயாக தான் தன்னுடைய சீஷர்களுக்கு சொல்லி கொடுத்தார் - 21.ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். 22.அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். 23.அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். 24.இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். 25.இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன் - யோவான் 16:21-25
மேலும், கர்த்தர் தன் சீஷர்களிடம் "பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்" என்று சொல்லியிருந்தார், இங்கு கர்த்தர் "பிதா" என்று சொன்னது நாம் பெறப்போகிற விலையேறப்பெற்ற புத்திரசுவிகாரத்தை குறித்ததே, அதன் நிறைவேறுதலே கர்த்தர் தனக்கு அன்பானவனாயிருந்த சீஷனிடம் "அதோ உன் தாய்" என்று சொன்னது, இதை தான் யோவான், காணக்கூடாத தேவனை தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து நமக்கு வெளிப்படுத்தினார் என்று எழுதியுள்ளார் - தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் - யோவான் 1:18
அதே சமயத்தில், தன் பிதாவிடம் "அதோ, உன் மகன்" என்று சொன்னது, அநேகரை பரலோக தேவனின் பிள்ளைகளாக மாற்றுவதின் துவக்கமாகவே இருந்தது- ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது - எபிரெயர் 2:10
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, யோவான்ஸ்நானனை "ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் பெரியவன்" என்று சொன்னதிலும் ஒரு இரகசியம் இருக்க தான் செய்கிறது, எப்படியெனில் ஸ்திரீகள் என்று பண்மையில் சொல்லும் பொழுது, அது இந்த பூமியில் வாழும் எண்ணற்ற பெண்களை குறிப்பதாய் இருக்கிறது - ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன் - மத்தேயு 11:11
ஆனால் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ "ஸ்திரீயினிடத்திற் பிறந்தவர்" என்று ஒருமையில் சொல்லப்பட்டிருக்கிறது, அது சகலமும் உண்டாக்கப்படும் முன்பே, தன்னுடை ஒரே பேறானவரை பெற்றெடுத்த பரலோகத்தின் தேவனையே குறிப்பதாய் இருந்தது - 4.நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, 5.காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார் - கலாத்தியர் 4:4-5
Next Chapter Mother of Jesus in the Book of Matthew
Previous Chapter Sun was darkened