பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களில் ஒன்று, குமாரனாகிய இயேசு கிறிஸ்து பலியாகும் பொழுது, பிதாவாகிய தேவனும் அருகே இருக்க வேண்டும் என்பதை இவ்வாறு அறிவிக்கிறது - ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள் - ஆதியாகமம் 22:6
தன் பிள்ளை பாடுபடுவதை எந்த தகப்பனால் தான் தாங்கிக்கொள்ள முடியும்? அதனால் தான் ஏசாயா தீர்க்கதரிசி குமாரனின் மரணத்தினால் பிதா அடைய போகும் வேதனையை விவரித்துச் சொல்ல, குமாரனை "அடிக்கப்படபோகிற ஆட்டுக்குட்டி" என்று சொல்லி, பிதாவாகிய தேவனை "சத்தமிடாதிருக்கிற ஆடு" என்று வேறுபடுத்தி சொல்லியிருந்தார் - அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார் - ஏசாயா 53:7
அது நிறைவேற வேண்டிய காரியமாய் இருந்ததினால் தான், இயேசு கிறிஸ்து தன்னுடைய சிலுவை மரண சமயத்தில் பிதா என்னுடனே இருப்பார் என்று சொல்லியிருந்தார் - இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார் - யோவான் 16:32
இந்த தீர்க்கதரிசனத்தை, பிதாவாகிய தேவன் சிலுவையண்டையில் நின்று நிறைவேற்றினார், அதாவது தனது ஒரே பிள்ளையாகிய இயேசு கிறிஸ்து அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய் துடித்துக்கொண்டிருந்த பொழுது, மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல நின்று கொண்டிருந்தார் - இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள் - யோவான் 19:25
அந்த சமயத்தில், இயேசு கிறிஸ்து தனக்கு அன்பானவனாயிருந்த சீஷனிடம் பரலோகத்தின் தேவனை வெளிப்படுத்தினது தான் "அதோ, உன் தாய்" என்பது, அது அநேகரை பிதாவின் பிள்ளைகளாக மாற்றுவதின் துவக்கமாகவே இருந்தது - 26.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான் - யோவான் 19:26-27
மேலும் "அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்" என்பது, மூல பாஷையில் "அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவரை தனக்கு சொந்தமாக்கி கொண்டான்" என்று எழுதப்பட்டுள்ளது, இப்படி, சிலுவையில் தன் ஜீவனை விடும் கடைசி வினாடிகளில் இயேசு கிறிஸ்து சொன்ன "அதோ உன் தாய்" என்கிற வார்த்தை, நாம் கர்த்தரின் கட்டளையின் படி வாழ்ந்து, அவரின் மார்பில் சாய்கிறவர்களாக மாறி, பரலோகத்தின் பிதாவை தரிசிக்க வேண்டும் என்பதற்காகவே...! நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது - ரோமர் 9:26
அப்படியல்ல, இயேசு கிறிஸ்துவின் சிலுவையினருகே கண்ணீரோடு நின்று கொண்டிருந்தது மரியாள் தான், அவள் தான் இயேசுவின் தாய் என்று மரியாளை வழிபட்டால், தேவகோபாக்கினை வெளிப்படும் என்பது நிச்சியமே - 21.அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. 22.அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, 23.அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள் - ரோமர் 1:21-23
Next Chapter Donkey and the foal of a donkey
Previous Chapter Who stood near by cross as Mother of Jesus?