He shall wave the sheaf before the Lord
Translation in progress from www.parisurthar.com
He shall wave the sheaf before the Lord
Translation in progress from www.parisurthar.com
ஒரு மரமானாலும் சரி, எந்த ஒரு ஜீவஜந்துவாக இருந்தாலும் சரி, அசைவு என்பது உயிரின் அடையாளமாக இருக்கிறது, ஒரு மரம் கூட தன்னில் ஜீவன் இருக்கும் வரைக்கும் தான் காற்றில் அசைகிறதாய் இருக்கிறது, எப்பொழுது அசைவு நின்று போகிறதோ அது அதின் மரணத்தை குறிப்பதாகவே இருக்கிறது, அல்லது செத்த பொருளாக கருதப்படுகிறது, அதனால் தான் ஜீவனுக்கெல்லாம் அதிபதியாகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தை குறிக்கும் பொருட்டாக, அறுக்கப்பட்ட முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவர வேண்டும் என்று கர்த்தர் மோசேயிடம் சொன்னார் - 9.பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 10.நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள் - லேவியராகமம் 23:9-10
அதே சமயத்தில், ஜீவாதிபதியாகிய இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று மூன்றாம் நாளில் உயிர்த்தெழப்போகிறார் என்பதை தீர்க்கதரிசனமாக எடுத்துரைக்கவும், எளிதாக புரிந்து கொள்ளும் விதமாகவும், ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை மூன்றாம் நாளில், அதாவது ஞாயிற்றுக்கிழமை காலையிலே கர்த்தருடைய சந்நிதியில் உயிர் பெற்றக் கதிரை போல அசைவாட்டவேண்டும் என்று கட்டளையிட்டார் - உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும் - லேவியராகமம் 23:11
இந்த அசைவாட்டும் பலி கர்த்தருடைய உயிர்த்தெழுதலை குறிப்பதினால், இந்த அசைவாட்டும் பலி ஏறெடுக்கப்பட்டு ஏழுவாரங்கள் கழித்து, பரிசுத்த ஆவியின் நிறைவை பெரும் பெந்தேகோஸ்தே பண்டிகை ஆசாரிக்கப்பட வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார் - 15.நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு, 16.ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள் - லேவியராகமம் 23:15-16