Lessons of Jesus
Chapter 1: Couldn’t even find time to eat
Chapter 1: Couldn’t even find time to eat
Previous Chapter: Introduction
கர்த்தரின் வல்லமையை சீஷர்கள் கண்ணார கண்டிருந்தார்கள், ஆனாலும் இன்னும் முழுமனதோடு, கர்த்தரை தங்கள் ஆத்ம மணவாளனாக ஏற்றுக் கொள்ளாமலிருந்தார்கள், அப்பொழுது தான் கர்த்தர், பரிசுத்தமாக வாழ்வதின் அவசியத்தை சொல்லிக் கொடுத்தார், எப்படியெனில், நம்மை காண, சிலர் வெகு தூரத்திலிருந்து வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களை கனப்படுத்தி, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இவ்வுலகத்தாரின் வழக்கம், ஆனால் கர்த்தரோ எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரும் வேதத்திற்கு விரோதமாக செய்யும் காரியங்களை சுட்டி காட்டி பேசினார் - 1.எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். 2.அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள். 3.ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள். 4.கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள். 5.அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள். 6.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், 7.மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். 8.நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார் - மாற்கு 7:1-8
கர்த்தர் சொன்னதை கேட்ட பரிசேயரும், வேதபாரகரும் அதின் உண்மையான அர்த்தத்தை அறிந்திருக்க வாய்ப்பு இல்லை, ஆனால் கர்த்தரால் போதிக்கப்பட்டிருந்த சீஷர்களோ, கர்த்தர் சொன்னது உவமை என்பதை அறிந்துக் கொண்டார்கள், அப்படியென்றால் அதற்கு வேறு அர்த்தமும் இருக்கிறது என்பது தானே அர்த்தம், அதை விளக்கிச் சொல்லும் படி கர்த்தரிடமே கேட்டார்கள் - 17.அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள். 18.அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? 19.அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும் - மாற்கு 7:17-19
கர்த்தர் சொன்னதை கேட்ட பரிசேயரும், வேதபாரகரும் அதின் உண்மையான அர்த்தத்தை அறிந்திருக்க வாய்ப்பு இல்லை, ஆனால் கர்த்தரால் போதிக்கப்பட்டிருந்த சீஷர்களோ, கர்த்தர் சொன்னது உவமை என்பதை அறிந்துக் கொண்டார்கள், அப்படியென்றால் அதற்கு வேறு அர்த்தமும் இருக்கிறது என்பது தானே அர்த்தம், அதை விளக்கிச் சொல்லும் படி கர்த்தரிடமே கேட்டார்கள் - 20.மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். 21.எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், 22.களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். 23.பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார் - மாற்கு 7:20-23
இதில் செம்பு, கிண்ணங்கள், செப்புக்குடங்கள் என்பது நாம் பாவத்திற்கு இடம் கொடுக்கும் நம் அந்தரங்க உறுப்புகளையும், மணைகள் என்பது நாம் பாவம் செய்யும் இடத்தையும் குறிக்கிறது, கர்த்தரை அறியாதவர்கள் கடைக்கு சென்று வருவது போல அடிக்கடி அங்கு சென்று வருவார்களாம், நமக்குள் அப்படிப்பட்ட காரியங்கள் இருக்க கூடாது என்று கர்த்தர் சொல்லிக் கொடுத்தார், அதனால் தான் கர்த்தர், நம்மை தீட்டுப்படுத்தும் காரியங்களை குறித்து தொடர்ந்து பேசினார்.
அப்பொழுது கர்த்தர், தான் பரிசேயர் மற்றும் வேதபாரரிடம் பாவத்தை குறித்துப் பேசினதையும், நம்மை தீட்டுப்படுத்தும் நம் சரிர அங்கங்களே அந்த செம்புகளும், கிண்ணங்களும், செப்புக்குடங்களும் என்பதை ஊர்ஜிதம் செய்தார் -
Next Chapter: Mother of Jesus in the Book of John