Lessons of Jesus
Chapter 1: Couldn’t even find time to eat
Chapter 1: Couldn’t even find time to eat
Previous Chapter: Introduction
இரட்சகராம் இயேசு கிறிஸ்து, ஒரு போதகராக இருந்தது மாத்திரம் இல்லாமல், நமக்கு ஒரு மாதிரியான வாழ்க்கையும் வாழ்ந்தார், அவரை பின்பற்றும் நாமும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ வேண்டியது அவசியம், அப்படி வாழ்ந்தால் மாத்திரமே பாக்கியவான்களாயிருப்போம் - 13.நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். 14.ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். 15.நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். 16.மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. 17.நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள் - யோவான் 13:13-17
ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள்
ஒருமுறை, இயேசு கிறிஸ்துவானவர், ஒரு சமாரிய ஸ்திரீயுடன் பேசுவதை பார்த்த சீஷர்கள் கர்த்தரை குறித்து ஆச்சரியப்பட்டார்களாம், அப்படியென்றால் சீஷர்கள் இயேசு ஸ்திரீயுடன் பேசுவதை பார்த்ததே இல்லை என்று தானே அர்த்தம் - 25.அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். 26.அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். 27.அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை - யோவான் 4:25-27
இவைகள் ஏன் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது? வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன் ஏன் இப்படி வாழ்ந்து காண்பித்தார்? இது நிச்சயமாகவே நாம் கடைபிடிக்க வேண்டிய காரியமாய் இருக்கிறது, நாம் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், நாம் மற்றவர்களோடு பேசும் பொழுது, அதில் ஒரு சிறிய இச்சை உண்டாகுமானால் அது தேவனுக்கு எதிரான பாவமே, அது முழு பரிமள தைலத்தையும் நாற செய்கிறதாய் இருக்கும். அதனால் கர்த்தருக்காக, நாம் மற்றவர்களோடு பேசுவதை தவிர்த்தால், அதுவே நம்மை காக்கிற பிரதான விஷயமாக இருக்கிறது - தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான் - I யோவான் 5:18
சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்
அது மாத்திரம் இல்லாமல், இயேசு கிறிஸ்து எருசலேமுக்கு வந்த பொழுது அநேக ஸ்திரீகளும் அவரோடே வந்திருந்ததாக பார்க்கிறோம் - 55.மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 56.அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள் - மத்தேயு 27:55-56
அப்படி இருந்தும் இரவு வேளைகளில் சீஷர்கள் மாத்திரமே தனியாக இருந்தனர், இப்படி தன் சீஷர்களும் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வழி நடத்தினார் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து - 1.இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள். 2.இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான் - யோவான் 18:1-2
என்னைத் தொடாதே
கிறிஸ்துவை பின்பற்றும் நாம் எப்படி கவனமாக இருக்க வேண்டும், அதாவது ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணோடு நடந்து கொள்ள வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார், உதாரணத்திற்கு தன்னை தேடி வந்த மகதலேனா மரியாளிடம் என்னைத் தொடாதே என்று சொன்ன இயேசு கிறிஸ்து - இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார் - யோவான் 20:17
தன் சீஷர்களிடம் தான் மரணத்தை வென்று உயிர்தெழுந்ததை நிரூபிக்க என்னைத் தொட்டுப்பாருங்கள் என்று சொன்னார் - 36.இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 37.அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். 38.அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? 39.நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, 40.தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார் - லூக்கா 24:36-40
Next Chapter: Mother of Jesus in the Book of John