Son of Man came eating and drinking
Jesus Christ is the Son of the Father, Son of the Word, and Son of the Holy Spirit
Jesus Christ is the Son of the Father, Son of the Word, and Son of the Holy Spirit
கர்த்தருக்கு விசேஷித்த பொருத்தனையின் பலியாயாவது, உற்சாக பலியாயாவது, பண்டிகைகளில் செலுத்தும் பலியாயாவது, சர்வாங்க தகனபலியையாவது, மற்ற யாதொரு பலியையாவது செலுத்தும் பொழுது, அதனோடு போஜனபலியையும், பானபலியையும் சேர்த்து படைக்கவேண்டும், அப்பொழுது தான் அது பரலோகத்திற்கு ஏற்ற சுகந்த வாசனையான தகனமாகப் பலியாய் இருக்கும் என்று வேதாகமம் சொல்லுகிறது - 1.கர்த்தர் மோசேயை நோக்கி: 2.நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, 3.விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது, உங்கள் பண்டிகைகளில் செலுத்தும் பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்க தகனபலியையாவது மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகப் பலியிடும்போது, 4.தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன். 5.பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும். 6.ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும், 7.பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும். 8.நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது, 9.அதனோடே பத்தில் மூன்று பங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும், 10.பானபலியாக அரைப்படி திராட்சரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்தவாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும். 11.இந்தப்பிரகாரமாகவே ஒவ்வொரு மாட்டுக்காகிலும், ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக் குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக் குட்டிக்காகிலும் செய்து படைக்கவேண்டும். 12.நீங்கள் படைக்கிறவைகளின் இலக்கத்திற்குத்தக்கதாய் ஒவ்வொன்றிற்காகவும் இந்தப்பிரகாரம் செய்யவேண்டும். 13.சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும் - எண்ணாகமம் 15:1-13
இப்படி கர்த்தருக்கு செலுத்தும் பலியானது, போஜனபலி மற்றும் பானபலியோடு சேர்த்து படைக்கபடவேண்டும் என்கிற கட்டளை, இந்த பூமிக்கு அந்நியனாக வரப்போகிற வார்த்தையானவருக்கு பிதா அருளிய கட்டளையாகவே இருந்தது, இப்படி வார்த்தையானவரின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து தன்னை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கும் பொழுது, இயேசு கிறிஸ்துவுக்குள் வாசம் செய்த பிதாவின் குமாரன் போஜனபலியாகவும், பரிசுத்த ஆவியானவரின் குமாரன் பானபலியாகவும் இருந்ததினால் தான், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் பரலோகத்திற்கு ஏற்ற சுகந்த வாசனையான தகனமாகப் பலியாய் இருந்தது - 14.உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும். 15.சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும். 16.உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார் - எண்ணாகமம் 15:14-16
இப்படி வார்த்தையானவர் பிதா மற்றும் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்திருப்பதை தான், ஏசாயா தீர்க்கதரிசி தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார் என்று சொல்லியிருந்தார் - 14.ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். 15.தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார் - ஏசாயா 7:14-15
இதை தான் இயேசு கிறிஸ்து, தன்னை குறித்துச் சொல்லும் பொழுது, மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார் என்று குறிப்பிட்டார் - 16.இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து: 17.உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. 18.எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். 19.மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார். 20.அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில் அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள், மனந்திரும்பாமற் போனபடியினால், அவைகளை அவர் கடிந்து கொள்ளத்தொடங்கினார் - மத்தேயு 11:12-20
இப்படி இயேசு கிறிஸ்து, தன்னை குறித்துச் மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார் என்று சொன்னது, வார்த்தையானவருக்குள் வாசம் செய்த பிதா மற்றும் பரிசுத்த ஆவியானவரையே குறிப்பதாய் இருந்தது, ஆனால் கர்த்தருக்கு கொடுக்கப்பட்ட பெயரோ போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன் என்பதாய் இருந்தது - 31.பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்? 32.சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். 33.எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். 34.மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள். 35.ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார் - லூக்கா 7:31-35