யோவான் மூலமாக எழுதி தரப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சுவிஷேசபுஸ்தகத்தில், பரலோகத்தின் தேவனை குறித்த சில உவமைகளையும், கர்த்தரின் சிலுவையினருகே பிதா வேதனையோடு நின்று கொண்டிருந்ததையும் பார்த்தோம், இப்பொழுது மத்தேயு, மாற்கு பரலோகத்தின் தேவனை குறித்து எப்படி எழுதியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம், மத்தேயு, மாற்குவின் விளக்கத்தையும் புரிந்துக் கொண்டால், நம் தேவனின் மகத்துவத்தையும் அவர் எங்கும் நிறைந்திருப்பவர் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம்
மத்தேயு, இயேசு கிறிஸ்துவின் சிலுவையினருகே, மகதலேனா மரியாளுடன், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாள் என்கிற நாமத்துடன் ஒருவர் வேதனையோடு நின்று கொண்டிருந்ததாக எழுதியுள்ளார் - 54.நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். 55.மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 56.அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள் - மத்தேயு 27:54-56
அவரை "மற்ற மரியாள்" என்றும், அவரே கர்த்தரின் உயிர்தெழுதலின் சமயத்திலும் மகதலேனா மரியாளுக்கு துணையாக இருந்தார் என்று எழுதியுள்ளார் - 1.ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். 2.அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். 3.அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது - மத்தேயு 28:1-3
Next Chapter Mother of Jesus in the Book of Mark
Previous Chapter Woman behold your Son