இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி) தற்சுரூபமாக, அதாவது பிதாவாகவும் (என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் - யோவான் 14:9), வார்த்தை என்கிற குமாரனாகவும்(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), பரிசுத்த ஆவியானவராகவுமாக(கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இருக்கின்றார்.
இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த அப்போஸ்தலனாகிய யோவான், தேவரகசியங்களை குறித்துச் சொல்லும் பொழுது, பிதாவாகிய பரலோகத்தின் தேவன் - பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் ஒரே தேவனாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
குமாரனை குறித்து சொல்லும் பொழுது, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனின் மூன்று குமாரர்களும் ஜலம், இரத்தம், ஆவியாக இயேசு கிறிஸ்து என்கிற ஒரே தெய்வமாக வெளிப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8, அதனால் தான் இயேசு கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்லுகிறது - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7.
கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த வார்த்தையானவர்
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், பிதா, வார்த்தை, மற்றும் பரிசுத்த ஆவி என்கிற காணக்கூடாத தேவனுடைய தற்சுரூபமாயிருக்கிறார், எப்படியெனில், திரியேக தேவனில் வார்த்தையானவர் மாம்சத்தில் வெளிப்பட்ட பொழுது, அவர் பிதாவாகிய கிருபையினாலும், பரிசுத்த ஆவியினாவராகிய சத்தியத்தினாலும் நிறைந்தவராய் இருந்தார், இருக்கிறார், வெளிப்படுவார்.
இதை தான் அப்போஸ்தலனாகிய யோவான், வார்த்தையானவர் கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார் என்று விளக்கியுள்ளார் - அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது - யோவான் 1:14
சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் அலங்கரிக்கப்பட்ட தேவாலயம்
ஒருமுறை, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னை எருசலேம் தேவாலயத்தோடு, ஒப்பிட்டுச் சொன்னதைத் தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 18.அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள். 19.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். 20.அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். 21.அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார் - யோவான் 2:18-21
எப்படி வார்த்தையானவர் கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் இருந்தாரோ, அப்படியே கர்த்தரை பிரதிபலித்த எருசலேம் தேவாலயமும், கர்த்தரின் திருத்துவத்தை வெளிப்படுத்த சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் அலங்கரிக்கப்பட்டதாய் இருந்ததாம் - 5.பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்துச் சிலர் சொன்னபோது, 6.அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார் - லூக்கா 21:5-6
கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்த போஜனபானபாத்திரங்களே
இப்படி நம்மை இரட்சிக்க வந்த திரியேக தேவனை, அதாவது கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த வார்த்தையானவரை அண்டி கொள்ளாத படி தடுத்த வேதபாரகரையும் பரிசேரையும் கர்த்தர், கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்த போஜனபானபாத்திரங்களே என்று அழைத்தார், இப்படி அழைத்ததிலும் கர்த்தருடைய பரிசுத்த திருத்துவம் விளங்கத்தான் செய்கிறது - 24.குருடரான வழிகாட்டிகளே, கொசுகில்லாதபடி (கொசு இல்லாதபடி) வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். 25.மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது - மத்தேயு 23:24-25
மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்த கல்லறைகளே
இப்படி நம்மை இரட்சிக்க வந்த திரியேக தேவனை, அதாவது கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த வார்த்தையானவரை அண்டி கொள்ளாத படி தடுத்த வேதபாரகரையும் பரிசேரையும் கர்த்தர், மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்த கல்லறைகளே என்று அழைத்தார், இப்படி அழைத்ததிலும் கர்த்தருடைய பரிசுத்த திருத்துவம் விளங்கத்தான் செய்கிறது - 26.குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. 27.மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும் - மத்தேயு 23:26-27
மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்த மாயக்காரர்களே
இப்படி நம்மை இரட்சிக்க வந்த திரியேக தேவனை, அதாவது கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த வார்த்தையானவரை அண்டி கொள்ளாத படி தடுத்த வேதபாரகரையும் பரிசேரையும் கர்த்தர், மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்த மாயக்காரர்களே என்று அழைத்தார், இப்படி அழைத்ததிலும் கர்த்தருடைய பரிசுத்த திருத்துவம் விளங்கத்தான் செய்கிறது - 28.அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். 29.மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: 30.எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். 31.ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள் - மத்தேயு 23:28-31