இரண்டாவது சுவிசேஷ புஸ்தகத்தை எழுதிய மாற்கு, இயேசு கிறிஸ்துவின் சிலுவையினருகே, மகதலேனா மரியாளுடன், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாள் என்கிற நாமத்துடன் ஒருவர் வேதனையோடு நின்று கொண்டிருந்ததாக எழுதியுள்ளார் - 37.இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். 38.அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. 39.அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான். 40.சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், 41.அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள் - மாற்கு 15:37-41
அவரை "யாக்கோபின் தாயாகிய மரியாள்" என்றும், அவரே கர்த்தரின் உயிர்தெழுதலின் சமயத்திலும் மகதலேனா மரியாளுக்கு துணையாக இருந்தார் என்று எழுதியுள்ளார் - 1.ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு, 2.வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, 3.கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் - மாற்கு 16:1-3
இதிலிருந்து, உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்துவை தரிசிக்க மகதலேனா மரியாள் தனியாக கல்லறைக்கு செல்லவில்லை என்பதை அறிந்துக் கொள்ளலாம், ஆனால், கடைசியில் மகதலேனா மரியாள் மாத்திரமே கர்த்தரை தரிசித்தாள் என்றால், மகதலேனா மரியாளுக்கு துணையாக வெவ்வேறு நாமத்தில் வந்தவர் யார்? தன் குமாரனின் நீதியை கண்டு அவரை உயிரோடு எழுப்பினர் தானே - 9.வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். 10.அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். 11.அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை - மாற்கு 16:9-11
Next Chapter He who is not against us
Previous Chapter Mother of Jesus in the Book of Matthew